குளுவாங், நவம்பர் 28 :
சிம்பாங் ரெங்கம், ஜாலான் சுங்கை சயோங் என்ற இடத்தில், இன்று பிற்பகல் புரோட்டோன் வீரா மற்றும் வேன் மோதிய விபத்தில் மூவர் உயிரிழந்தனர் மற்றும் ஐந்து பேர் காயமடைந்தனர்.
ஜோகூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் முதற்கட்ட தகவலின்படி, இறந்தவர்கள் முஹமட் கைருல் ரோஸ்லி, 17 மற்றும் முஹமட் ஹாசிக் ஹைகல் முகமட் பைசல், 20 மற்றும் முஹமட் ஹாசிக் கமாருல் அசார், 17, என அடையாளம் காணப்பட்டனர்.
ரெங்கம் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து ஆபரேஷன்ஸ் கமாண்டர், மூத்த தீயணைப்பு அதிகாரி II ஷோரோமி சாலிஹ் கூறுகையில், மாலை 4.29 மணிக்கு அவசர அழைப்பைப் பெற்றதன் பேரில் எட்டு உறுப்பினர்களுடன் FRT இயந்திரம் சம்பவ இடத்திற்கு விரைந்தது.
புரோட்டோன் சாகாவில் பயணித்த நால்வரில் பின்னிருக்கையிலிருந்தவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். மேலும் புரோத்தோன் வீரா காரின் பின்பக்கத்தில் இருந்த அடையாளம் தெரியாத மற்றொரு பயணியை தீயணைப்பு படையினர் வருவதற்குள் பொதுமக்கள் வெளியேற்றி HEBHK க்கு அழைத்துச் சென்றனர்.
மேலும் விபத்தில் காயமடைந்த ஏனைய நால்வர் சுகாதார அமைச்சின் ஆம்புலன்ஸிடம் ஒப்படைக்கப்பட்டதுடன், சம்பவ இடத்தில் இறந்த இருவரது உடல்கள் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டன, இன்னொருவர் படுகாயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார் என்றும் அவர் மேலும் கூறினார்.