லங்காவி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நவாவி அகமது காலமானார்

லங்காவியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  டத்தோ நவாவி அகமது காலமானார்.  லங்காவி அம்னோ பிரிவுத் தலைவர் (61), திங்கள்கிழமை (நவம்பர் 28) ஜெர்மனியின் பிராங்பேர்ட்டில் அதிகாலை 3 மணியளவில் காலமானதாக முன்னாள் குவா சட்டமன்ற உறுப்பினர் நோர் சைடி  தெரிவித்தார்

“அவர் தெனாகா நேஷனல் பெர்ஹாட் குழு உறுப்பினராக பணிநிமித்தமாக ஜெர்மனியின் பிராங்பேர்ட்டில் இருந்தார்,” என்று அவர் கூறினார். நவாவியுடன் அவரது மனைவி டத்தின் சபரியா ஹாசனும் இருப்பதாகவும், அவரது உடல் பிராங்பேர்ட்டில் அடக்கம் செய்யப்படும் என்றும் சைடி கூறினார்.

நவாவி 2013 – 2018 வரை ஒரு முறை லங்காவி நாடாளுமன்ற உறுப்பினர் பணியாற்றினார் மற்றும் 2004 முதல் 2013 வரை இரண்டு முறை முன்னாள் குவா சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். 14ஆவது பொதுத் தேர்தலில் நவாவி லங்காவி நாடாளுமன்றத் தொகுதியில் துன் மகாதீர் முகமட்டிடம் தோற்றார். இருப்பினும் அவர் GE15 இல் வேட்பாளராக போட்டியிடவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here