ஜாசின், நவம்பர் 28 :
வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் வடக்கு நோக்கி 179வது கிலோமீட்டரில், இன்று அதிகாலையில் சிங்கப்பூரர்கள் உட்பட 27 பயணிகள் சென்ற விரைவுப் பேருந்து டிரெய்லரின் பின்புறத்தில் மோதியதில், மொத்தம் 16 பேர் காயமடைந்தனர்.
ஜாசின் பெஸ்தாரி தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் செயல்பாட்டு அதிகாரி அஸ்மான் முகமட் தவாம் கூறுகையில், அதிகாலை 3.57 மணிக்கு விபத்து குறித்து தனக்கு அழைப்பு வந்தது என்றார்.
“அதிகாலை 4.10 மணிக்கு அந்த இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர், மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை ஏற்றிச் சென்ற டிரெய்லர் டிரக்கின் பின்புறத்தில் எக்ஸ்பிரஸ் பஸ் மோதியது கண்டுபிடிக்கப்பட்டது.
“அந்த பேருந்தில் பயணஞ் செய்த மொத்தம் 27 பயணிகளில் 16 பேர் சிறிய காயங்களுக்கு ஆளாகியுள்ளனர், ஏனைய 11 பேர் பாதுகாப்பாக உள்ளனர்.
“காயமடைந்த அனைவருக்கும் ஆரம்ப சிகிச்சை அளிக்கப்பட்டு, ஆம்புலன்ஸ் மற்றும் ஈ.எம்.ஆர்.எஸ் வாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, மேலதிக சிகிச்சை அளிக்கப்பட்டது,” என்றார்.