அன்வாருக்கு தொடரும் வாழ்த்துக்கள்

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு மலேசியாவில் உள்ள அரபு தூதரகம், ஏமன் மற்றும் சோமாலியாவின் பிரதமர்கள்  வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.    மலேசியாவில் உள்ள அரபு தூதரகக் குழுத்தலைவர் டாக்டர் அடெல் மொஹமட் அலி பா ஹமிட்,  இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ள நாடுகளுடன் சகோதரத்துவம் மற்றும் ஒத்துழைப்பின் ஆழமான வேரூன்றிய உறவுகளை வளர்ப்பதில் அன்வார் ஆக்கப்பூர்வமான பங்கை வகிப்பார் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

ஏமன் குடியரசின் தூதராக இருக்கும் டாக்டர் அடெல்,  அன்வார் தனது ஒற்றுமை அரசாங்கத்தை  பதவிக்காலம் முடியும் வரை வெற்றிகரமாக வழிநடத்துவார் என்று நம்பிக்கை தெரிவித்தார்.  இதற்கிடையில், ஏமன் பிரதமர் டாக்டர் மைன் அப்துல்மாலிக் சயீத் மற்றும் சோமாலியாவின் பிரதமர் ஹம்சா அப்டி பாரே ஆகியோர் அன்வாருக்கு தங்கள் வாழ்த்துச் செய்திகளையும், மலேசியாவின் முன்னேற்றத்திற்கான நம்பிக்கையையும் தெரிவித்தனர்.

ஏமன் மற்றும் மலேசியா இடையே சகோதரத்துவ உறவு மேம்படும் என்றும், இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகள்  பலப்படுத்தப்படும் என்றும் டாக்டர் மைன்  தெரிவித்தார்.

அன்வாரின் தலைமையின் கீழ், மொகடிஷுவிற்கும் கோலாலம்பூருக்கும் இடையே இருக்கும் நட்புறவு செழித்து வலுவடைந்து, தங்கள் மக்களுக்கு பரஸ்பர நன்மைகளை வழங்கும் என்பது அவரது நம்பிக்கை.   சோமாலியாவும் மலேசியாவும் தங்கள் வலுவான வரலாற்று உறவுகள், வர்த்தகம் மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றின் மூலம்    நீண்டகால  உறவைப் பகிர்ந்து கொண்டதாக கூறினார்.

இருதரப்பு ஒத்துழைப்பின் ஆழத்தையும் அளவையும் மேம்படுத்துவதற்கும், புதிய மற்றும் வளர்ந்து வரும் பகுதிகளுக்கு அவற்றை விரிவுபடுத்துவதற்கும்   அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here