ஆபாச ‘மார்பிங்’ படம்… நடிகை போலீசில் புகார்

பிரபல தெலுங்கு நடிகை அனுசுயா. சமீப காலமாக இவரது புகைப்படங்கள் ஆபாசமாக மார்பிங் செய்யப்பட்டு சமூக வலைத்தளங்களில் வெளியாகி வந்தன. அந்த புகைப்படங்களை பலர் உண்மை என்று நம்பினர். ஆபாசமாக போஸ் கொடுத்து இருப்பதாக விமர்சனங்களும் கிளம்பின.

இந்த நிலையில் தனது புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து இணைய தளத்தில் வெளியிடுபவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி அனுசுயா ஆந்திர மாநில சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி ஆந்திரா மாநிலம் பசலபுடி கிராமத்தை சேர்ந்த ராம வெங்கடராஜு என்பவரை கைது செய்தனர்.

இவர்தான் அனுசுயாவின் ஆபாச மார்பிங் புகைப்படங்களை வெளியிட்டு வந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. இவர் துபாயில் பிளம்பராக மூன்று ஆண்டுகள் பணியாற்றி விட்டு இந்தியா திரும்பி உள்ளார். அவரது லேப்டாப்பில் நடிகைகள் விஷ்ணு பிரியா, ரோஜா, ரஷ்மி, பிரகதி போன்றோரின் புகைப்படங்கள் இருந்ததையும் போலீசார் கண்டு பிடித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here