மதபோதகர் ஒருவருக்கு எதிராக கற்பழிப்பு, பாலியல் வன்கொடுமை உட்பட ஒன்பது குற்றச்சாட்டுகள்

கிள்ளான், நவம்பர் 29 :

ஜூன் 2021 முதல் கடந்த பிப்ரவரி வரை ஒரு இளம்பெண்ணை பலாத்காரம் செய்தல், பாலியல் வன்கொடுமை செய்தல் மற்றும் இயற்கைக்கு மாறான உடலுறவு செய்தல் ஆகிய ஒன்பது குற்றச்சாட்டுகள் ஒரு மதபோதகருக்கு எதிராக இங்குள்ள அமர்வு நீதிமன்றத்தில் இன்று செவ்வாய்கிழமை (நவம்பர் 29) குற்றஞ்சாட்டப்பட்டது.

குற்றஞ்சாட்டப்பட்ட முஹமட் பாத்தி நயிம் மஸ்லாம், 30, என்பவருக்கு எதிரான 9 குற்றச்சாட்டுக்கள் நீதிபதி சயபீரா முகமட் முன்னிலையில் படித்து காட்டப்பட்டபோது, அவர் தான் குற்றமற்றவர் என்று குறி, விசாரணை கோரினார்.

மூன்று மனைவிகள் மற்றும் எட்டு குழந்தைகளைக் கொண்ட குற்றஞ்சாட்டப்பட்டவர், தற்போது 14 வயதாகும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து இயற்கைக்கு மாறான உடலுறவில் ஈடுபட்டதற்காக குற்றம் சுமத்தப்பட்டது.

ஜூன் 2021 முதல் இந்த ஆண்டு பிப்ரவரி வரையிலான காலக்கட்டத்தில், Dataran Eco World வாகன நிறுத்துமிடத்திலும், பண்டார் புன்சாக் ஆலாம் அருகே உள்ள ஒரு ஹோட்டலிலும், ஒரு சூராவுக்கு முன்னால் ஒரு வாகனத்திலும் குற்றங்கள் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அவர் அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் சேர்த்து ஒரு தனி நபர் உத்தரவாதத்துடன் RM40,000 ஜாமீனில் செல்ல நீதிமன்றம் அனுமதித்தது. மேலும் மாதம் ஒருமுறை காவல்நிலையத்தில் வந்து ஜராகுமாறும் உத்தரவிடப்பட்டது, அத்துடன் வழக்கில் பாதிக்கப்பட்டவர் மற்றும் சாட்சிகளை மிரட்டக்கூடாது என்றும் கூறப்பட்டது.

இந்த வழக்கை அடுத்த ஆண்டு ஜனவரி 10ஆம் தேதிக்கு செவிமடுக்கப்படும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here