அன்வாருக்கு இலங்கை அதிபர் விக்கிரமசிங்கே வாழ்த்து

புதுடில்லி: மலேசியாவின் பிரதமராக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பதவியேற்றதற்கு, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே வியாழக்கிழமை வாழ்த்து தெரிவித்தார்.

அன்வார் பிரதமராக நியமிக்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்த விக்ரமசிங்க, “இன்று காலை தொலைபேசி உரையாடலின் போது இலங்கைக்கும் மலேசியாவுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார்” என்று இலங்கை ஜனாதிபதி அலுவலகம் டுவிட்டரில் தெரிவித்துள்ளது.

இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தன அன்வாருக்கு சமீபத்தில் வாழ்த்து தெரிவித்தார்.இரு நாடுகளுக்கும் இடையே 1957 இல் இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டன. மலேசியாவின் 10வது பிரதமராக அன்வார் கடந்த வியாழன் (நவம்பர் 24)  பதவியேற்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here