டிசம்பர் மாதம் முழுதும் ஈரப்பதமான வானிலையே நிலவும்

தற்போதைய  லா நினா நிகழ்வு மற்றும்  இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிலவும் வானிலை காரணமாக நாட்டில்   இந்த மாதம் முழுவதும் அசாதாரண ஈரபதமான வானிலையே   நீடிக்கும்.   10% முதல் 20% வரை மழை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நவம்பர் மாதத்தில் குறிப்பிடத்தக்க அளவு மழை பெய்தது, பெரிய வெள்ளம் ஏதும் இல்லை என்றாலும், ஒரு சில மாநிலங்களில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது  என்று மலாயா பல்கலைக்கழக காலநிலை நிபுணர் பேராசிரியர் டத்தோ டாக்டர் அஜிசான் அபு சாமா கூறினார்.

லா நினா ஒரு நிலையான அச்சுறுத்தலாக இருந்து வருகிறது மற்றும் பூமத்திய ரேகை பசிபிக் பெருங்கடலில் உள்ள நீர் குளிர்ச்சியடையும் போது,  மேலும்​​ இந்தியப் பெருங்கடலில் வெப்பநிலை முறைகளில் ஏற்படும் மாற்றத்தினால்  இவ்வாறு உண்டாகிறது.

ஆசியான் சிறப்பு வானிலை ஆய்வு மையத்தின் பருவகால முன்னறிவிப்பின்படி ஆண்டு இறுதி வரை நாட்டில் இயல்பை விட அதிகமாக மழை பெய்யும் என்று பேராசிரியர் அஜிசன் கூறினார்.  வெள்ளம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து  இன்னும் தெளிவான தகவல்கள்  தெரியவில்லை.இருப்பினும்  தெரெங்கானுவில் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது  என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

பெர்லிஸ், கெடா, பினாங்கு, வடக்கு பேராக் மற்றும் கிளந்தான், தெரெங்கானு, கிழக்கு பகாங் மற்றும் சபா ஆகிய இடங்களில் ஞாயிற்றுக்கிழமை வரை தொடர் மழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) எச்சரிக்கை விடுத்துள்ளது.

நவம்பர் 7-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை மையம் அறிவித்ததில்  இருந்து  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு தயாராகி வருவதாக தேசிய பேரிடர் மேலாண்மை முகமை துணை இயக்குநர் டத்தோ கைருல் ஷஹரில் இட்ரஸ் தெரிவித்தார்.  தொடர்ச்சியான கனமழையால் தாழ்வான பகுதிகள் மற்றும் ஆறுகளுக்கு அருகில் வெள்ளம் ஏற்படலாம்  என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here