11 மலேசிய தூதர்களுக்கான நியமனக் கடிதங்களை பேரரசர் வழங்கினார்

இஸ்தானா நெகாரா, டிசம்பர் 2 :

மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரி’அயாத்துடின் அல் முஸ்தாஃபா பில்லா ஷா, இன்று வெள்ளிக்கிழமை இஸ்தான நெகாராவில் வெளிநாட்டிற்கான 11 புதிய மலேசியத் தூதர்களுக்கு, நியமனக் கடிதங்களை வழங்கினார்.

இஸ்தானா நெகாரா பேச்சாளர், டத்தோ ஶ்ரீ அஹ்மட் ஃபாடில் சம்சுடின் கூறுகையில், ஐக்கிய அரபு சிற்றரசுக்கான மலேசியத் தூதராகவும், வியட்நாமிற்கான மலேசியத் தூதராக டத்தோ தன் யங் தாய்யும், ஜெர்மனிக்கான மலேசியத் தூதராக டாக்டர் அர்டினா கமாருடினும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுடன் மேலும் பாகிஸ்தானுக்கான மலேசியத் தூதராக முகமட் அசஹார் மஸ்லான், ஜோர்டனுக்கான மலேசியத் தூதராக முகமட் நஸ்ரி அப்துல் ரஹ்மான், உஸ்பெகிஸ்தானுக்கான மலேசியத் தூதராக இல்ஹாம் துவான் இல்லியாஸும், நியூசிலாந்துக்கான மலேசியத் தூதராக மசிதா மார்சுகி ஆகியோரும் இன்று நியமனக் கடிதத்தை பெற்றுக் கொண்டனர்.

மேலும், சினேகலுக்கான மலேசியத் தூதராக சைனால் இஸ்ரான் சஹாரியும், கசகஸ்தானுக்கான மலேசியத் தூதராக முகமட் அட்லி அப்துல்லாவும், லாவோஸுக்கான மலேசியத் தூதராக எடி இர்வான் மாஹ்முட்டும் மற்றும் இலங்கைக்கான மலேசியத் தூதராகா பட்லி ஹிஷாம் ஆடாம் ஆகியோரும் தங்களின் நியமனப் பத்திரத்தை மாமன்னரிடமிருந்துப் பெற்றுக் கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here