அன்வார் தலைமையிலான முதல் அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது

பிரதமர் அன்வார் இப்ராஹிம் தலைமையில் இன்று காலை பெர்டானா புத்ராவில் ஒற்றுமை  அரசாங்கத்தின்  சிறப்பு அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

காலை 10 மணிக்கு அவரது நிர்வாகத்தின் கீழ் நடந்த முதல் கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.  கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு முன்பாக பெரும்பாலான அமைச்சரவை உறுப்பினர்கள்  தங்களது  அலுவலகங்களுக்குச் சென்றிருந்தனர்.

நிதியமைச்சராக இருக்கும் பிரதமர்   இரண்டு துணைப் பிரதமர்கள் மற்றும் 28 அமைச்சர்கள் அடங்கிய அமைச்சரவை பட்டியலை  வெள்ளிக்கிழமை அறிவித்திருந்தார்  என்பது குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here