துணை அமைச்சர்கள் நியமனம் குறித்து அரசாங்கம் இந்த வாரத்தில் முடிவெடுக்கும் என்று பொருளாதார விவகார அமைச்சர் ரஃபிஸி ரம்லி தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், துணை அமைச்சர்கள் ஓரிரு வாரங்களில் பதவிப் பிரமாணம் செய்து கொள்வார்கள் என்று ரஃபிஸி கூறினார்.
இது தொடர்பாக நேற்று அமைச்சரவையில் சுருக்கமாக கலந்துரையாடப்பட்டதாக அவர் கூறினார். ஒவ்வொரு கட்சியிலிருந்தும் பிரதி அமைச்சர்களின் எண்ணிக்கை அவர்கள் வைத்திருக்கும் எம்.பி.க்களின் எண்ணிக்கையைப் பொறுத்தே அமைச்சரவைக்கான நியமனங்கள் நடைபெறும்.
எந்த இலாகாவுக்கு யார் பொருந்துவார்கள் என்பதைப் பார்க்க, ஒற்றுமை அரசாங்கத்தின் தலைவர்களால் முன்மொழியப்பட்ட வேட்பாளர்களைப் பிரதமர் நியமிப்பார் என்று அவர் கூறினார். அன்வார் இப்ராஹிம் தனது 28 உறுப்பினர்களைக் கொண்ட அமைச்சரவையை வெள்ளிக்கிழமை வெளியிட்டார். நாடாளுமன்ற உறுப்பினர்களாக இல்லாத நான்கு அமைச்சர்கள் – தெங்கு ஜஃப்ருல் அஜிஸ், சைபுதீன் நசுதின் இஸ்மாயில், ஜாம்ப்ரி அப்துல் காதிர் மற்றும் நயிம் மொக்தார் ஆகியோர் செனட்டர்களாக பதவியேற்றனர்.