நாட்டில் ஏற்பட்டுள்ள கோழி முட்டை பற்றாக்குறையை சமாளிக்க, தற்காலிகமாக அவற்றை இறக்குமதி செய்ய முடிவு – வேளாண்மை மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர்

பெட்டாலிங் ஜெயா, டிசம்பர் 6 :

தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் கோழி முட்டை பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய, மலேசியா கோழி முட்டைகளை தற்காலிகமாக இறக்குமதி செய்யும் என்று வேளாண்மை மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் முகமட் சாபு தெரிவித்தார்.

மலேசியர்கள் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 968 மில்லியன் கோழி முட்டைகளை உட்கொள்வதாகவும், அவர்களின் உணவுப் பாதுகாப்பை உறுதிச் செய்ய இந்த குறுகிய காலத் தீர்வு இன்றியமையாதது என்றும் அவர் கூறினார்.

இது எந்த விதத்திலும் உள்ளூர் முட்டை உற்பத்தியாளர்களுக்கு போட்டியை ஏற்படுத்தி, அழுத்தம் கொடுக்கும் முயற்சி இல்லை என்றும், மாறாக உள்நாட்டு முட்டை விநியோகத்தில் ஏற்படும் இடையூறுகளைத் தடுப்பதற்காகவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அவர் மக்களுக்கு உறுதியளித்தார்.

“இந்த முட்டை இறக்குமதி முயற்சியின் மூலம், நாட்டில் முட்டை விநியோகம் துண்டிக்கப்படாமல் இருக்கவும், மக்களின் நலன் பேணப்படுவதை உறுதி செய்யவும் அமைச்சு தொடர்ந்தும் கண்காணிப்புக்களை மேற்கொள்ளும் ” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here