புத்ராஜெயா, டிசம்பர் 6 :
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று அதிகாரப்பூர்வமாக நிதியமைச்சராக தனது பணிகளை தொடங்கினார்.
இன்று காலை 7.58 மணிக்கு நிதி அமைச்சகத்தின் கட்டிட வளாகத்திற்கு வந்த அவரை, நிதி அமைச்சகத்தின் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் வரவேற்றத்துடன் அவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
அதன் பின்னர் நிதி அமைச்சகத்தின் அதிகாரிகளுடன் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, அவர் 12 வது மாடியிலுள்ள தமது அலுவலகத்திற்குச் சென்றார்.
தற்போது 75 வயதான அன்வார், முன்னதாக துன் டாக்டர் மகாதீர் முகமட் தலைமையிலான அரசாங்கத்தில், 1991 முதல் 1998 வரை எட்டு ஆண்டுகள் நிதியமைச்சராக இருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.