ஈப்போ, டிசம்பர் 6 :
இங்குள்ள பெர்சாம் ராயாவில் பூட்டிய பலநோக்கு வாகனத்திற்குள் 30 நிமிடங்களுக்கு மேல் சிக்கிக் கொண்ட மூன்று வயது சிறுமி, தீயணைப்பு வீரர்களால் இன்று பாதுகாப்பாக மீட்கப்பட்டான்.
தம்புன் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், காலை 8.10 மணியளவில் சம்பவம் தொடர்பில் அவசர அழைப்பைப் பெற்ற தீயணைப்புத் துறையினர், உடனே சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
“அவ்விடத்திற்கு வந்ததும், பாதிக்கப்பட்டவரின் தாய் மளிகைப் பொருட்களை வாங்க வெளியே சென்றபோது பூட்டிய புரோத்தோன் எக்ஸோராவிற்குள் சிறுமி மாட்டிக்கொண்டாதாக அறியமுடிந்தது.
“சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி தீயணைப்புத் துறையினர் பாதிக்கப்பட்டவரை பாதுகாப்பாக வெளியேற்றினர் என்றும், பின்னர் பாதிக்கப்பட்டவரின் தாயிடம் ஒப்படைக்கப்பட்டார் என்றும் காலை 8.20 மணியளவில் நடவடிக்கை முடிவடைந்தது ” என்று, அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.