முஹிடின் அம்னோவுக்கு மில்லியன் கணக்கான ரிங்கிட் கொடுத்ததாக குற்றச்சாட்டு: எம்ஏசிசி விசாரணை

2020 சபா தேர்தலின் போது   மில்லியன் கணக்கான ரிங்கிட்களை அம்னோவுக்கு வழங்கியதாக முன்னாள் கெத்தரே நாடாளுமன்ற உறுப்பினர் அன்னுவார் மூசா கூறியதை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) விசாரித்து வருகிறது.   MACC  லஞ்ச  ஊழல் எதிர்ப்பு ஆணையம் முஹிடின் மற்றும் அன்னுவார் ஆகியோரை விசாரணைக்கு அழைக்கும்  என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நவம்பர் 21 அன்று டிக்டோக்கில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், சபாவில் இருந்தபோது முஹிடின் தன்னை “மில்லியன்கணக்கான” ரிங்கிட் கொடுப்பதற்காக சந்தித்ததாக அன்னுவார் கூறினார். இந்த நிதி  குறித்து சமூக ஊடகங்களில் கேள்விகள் எழுந்தன.

நான் சபாவுக்குப் பறந்து சென்று முஹிடினைச் சந்தித்தேன்.  அவரது அறைக்குள் நுழைந்து, அம்னோவிடம் போதுமான பணம் இல்லை, நிதி இல்லை என்று சொன்னேன். சபாவில் இருந்தபோது அம்னோவுக்கு உதவுவதற்காக முஹிடின் மில்லியன்கணக்கான பணத்தைக் கொடுத்தார் என்று 15ஆவது பொதுத் தேர்தலுக்கு (GE15) இரண்டு நாட்களுக்குப் பிறகு வெளியிடப்பட்ட வீடியோவில் அன்னுவார் கூறினார்.

பாரிசான் நேஷனல் GE15க்கான வேட்பாளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட அம்னோ தலைவர்களில் முன்னாள் தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா அமைச்சரான அன்னுவார் ஒருவர் ஆவார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here