புத்ராஜெயா, டிசம்பர் 6:
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஹன்னா இயோ, விளையாட்டு வீரர்களை விரைவில் சந்தித்து, அவர்களின் தேவைகள் மற்றும் நலன்கள் குறித்து பேச்சு நடத்த புதிய விளையாட்டுத்துறை அமைச்சரான ஹன்னா இயோ விருப்பம் தெரிவித்துள்ளார்.
“விளையாட்டாளர்களின் முந்தைய திட்டங்களை பாதிக்கும் வகையில் திடீர் மாற்றங்களைச் செய்து அவர்களை சீர்குலைக்கும் எண்ணம் இல்லை” என்று, இன்று செவ்வாய்கிழமை (டிசம்பர் 6) இங்குள்ள விளையாட்டுத்துறை அமைச்சகத்தில் தனது பணியை தொடங்கிய பின்னர், நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
மேலும் “புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தும் எண்ணம் எனக்கு இல்லை, முதலில் விளையாட்டு வீரர்களிடம் இருந்து அவர்களின் தேவைகள் மற்றும் நலன்கள் குறித்து பேச்சு நடத்தி, ஏற்கனவே உள்ள திட்டங்களை வலுப்படுத்துவதற்கான வழியைக் கண்டறிய விரும்புகிறேன்.
“அத்தோடு ஏற்கனவே இருக்கும் திட்டங்களை அவர்கள் தொடரலாம். ஏனெனில் நாம் திசையை மாற்றிக்கொண்டே இருந்தால், அவர்கள் பின்பற்றுவது கடினமாக இருக்கும்,” என்று அவர் கூறினார்.
அத்தோடு பொறுப்பை நிறைவேற்றுவதில் வெளிப்படைத்தன்மை மற்றும் செலவுகளில் பொறுப்புக்கூறல் மிகவும் முக்கியம் என்றும் அவர் தெரிவித்தார்.