பெட்டாலிங் ஜெயா, டிசம்பர் 7 :
மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை இஸ்தானா புக்கிட் கயங்கான், ஷா ஆலாமில் நேற்று சந்தித்தார்.
நேற்று செவ்வாய்கிழமை (டிசம்பர் 6) சிலாங்கூர் ராயல் ஆபிஸ் ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த விஷயம் ஒரு பதிவின் மூலம் அறிவிக்கப்பட்டது.
கடந்த நவம்பர் 24 அன்று அன்வார் மலேசியாவின் 10வது பிரதமராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.