சட்ட வரம்புடன் கூடிய பேச்சு சுதந்திரம் : அமைச்சர் விளக்கம்

தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் துறை  அமைச்சர் Fahmi Fadzil (pix),      பேச்சு சுதந்திரத்திற்கான உரிமையை பாதுகாப்பேன் என்றும்   அது  சட்டங்களுக்கு உட்பட்டதாக  இருக்க வேண்டும்   என்று  கூறினார்.  பேச்சு சுதந்திரம் என்பது அவதூறு மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கொண்டதாக இருக்கக் கூடாது என்றார்.

ஒரு அரசியல்வாதியாக, நாடாளுமன்ற உறுப்பினராகவும், இப்போது அமைச்சராகவும் இருப்பதால், பேச்சு சுதந்திரம் நிச்சயம் பாதுகாக்கப்படும், ஆனால் தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா  சட்டங்களை விவரிக்கும்போது அதற்கான  ​​வரம்புகள் உள்ளன என்று செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.  அப்போது தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சகத்தின் பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ முகமது மென்டேக்கும் உடனிருந்தார்.

பேச்சு சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காக மலேசிய தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா கமிஷன் (MCMC) மற்றும் சமூக ஊடகத்தினருக்கு இடையே  நெருக்கமான ஒத்துழைப்பை ஏற்படுத்துவதில் அமைச்சகம் கவனம் செலுத்துவதாகவும், அதே நேரத்தில் சட்டத்திற்கு இணங்குவதை உறுதி செய்வதிலும் அமைச்சகம் கவனமாக இருக்கும் என்று ஃபஹ்மி தெரிவித்தார்.

.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here