நவம்பர் 30 வரை மொத்தம் 1.4 மில்லியன் வெளிநாட்டினருக்கான தற்காலிக பணி அனுமதிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன

புத்ராஜெயா, டிசம்பர் 9 :

இந்தாண்டின் நவம்பர் 30 வரை, ஏழு துறைகளைச் சேர்ந்த மொத்தம் 1.4 மில்லியன் வெளிநாட்டினருக்கான தற்காலிக பணி அனுமதிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுஷன் இஸ்மாயில் தெரிவித்தார்.

இதில் “கட்டுமானத்துறையில் 309,000 பேரும், பெருந்தோட்டம் 161,000 பேர் , சேவைகள் 208,000 பேர், விவசாயம் 111,000 பேர், வீட்டுப் பணியாளர்கள் 92,000 பேர்; மற்றும் சுரங்கம் மற்றும் குவாரி 142,000 பேரும் பணி அனுமதியை வைத்துள்ளனர்.”

கடந்த டிசம்பர் 4 வரை, தமது துறைக்கு மொத்தம் 404,000 வெளிநாட்டுத் தொழிலாளர்களின் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன என்றும், “இந்த எண்ணிக்கையில், நாங்கள் 374,000 விசாக்களை குறிப்பு ஒப்புதலுடன் அனுமதி வழங்கியுள்ளோம், மீதமுள்ள 30,000 விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்படுகின்றன ”
என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here