நாளை வரை சில மாநிலங்களில் அபாய நிலை கனமழைக்கு வாய்ப்பு

கிளந்தான் மற்றும் தெரெங்கானுவில் உள்ள பல மாவட்டங்களுக்கு நாளை வரை அபாய நிலை தொடர் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) எச்சரிக்கை விடுத்துள்ளது.

கிளந்தானில் உள்ள தும்பாட், பாசீர் மாஸ், கோத்தா பாரு, ஜெலி, தானா மேரா, பச்சோக், மச்சாங், பாசீர் பூத்தே மற்றும் கோல க்ராய் ஆகியவை பாதிக்கப்படும் என்று அது கூறியது. தெரெங்கானுவில், பெசுட், செட்டியூ, கோல நெரஸ், உலு தெரெங்கானு, கோல தெரெங்கானு மற்றும் மாராங் ஆகிய மாவட்டங்கள் சம்பந்தப்பட்டவை.

நாளை வரை பேராக் (உலு பேராக்), கிளந்தான் (குவா முசாங்), தெரெங்கானு (டுங்குன் மற்றும் கெமாமன்) மற்றும் பகாங் (ஜெரான்டுட் மற்றும் குவாந்தன்) ஆகிய இடங்களில் கடுமையான அளவிலான தொடர்ச்சியான கனமழையை மெட்மலேசியா எதிர்பார்க்கிறது.

பேராக்கில் கெரியன், லாரூட், மாடாங், செலாமா, கோல கங்சார், மஞ்சோங், கிந்தா, பேராக் தெங்கா மற்றும் கம்பார் ஆகிய இடங்களிலும், பகாங்கில் கேமரன் ஹைலேண்ட்ஸ், லிபிஸ், மாரான், பெக்கான் மற்றும் ரொம்பின் ஆகிய இடங்களிலும் எச்சரிக்கை நிலை தொடர் மழை எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here