சுகாதார அமைச்சகம் (MOH) கிராமப்புற மக்களுக்கு சிறந்த சுகாதார சேவையை வழங்க மற்ற முகவர் மற்றும் அமைச்சகங்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று பந்தர் கூச்சிங் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கெல்வின் யி கூறினார்.
முறையான மருத்துவ சிகிச்சை பெறுவதில் தாமதம் ஏற்பட்டதன் விளைவாக ஒரு குழந்தை மற்றும் ஒரு வயதான நபர் என இரண்டு மரணங்கள் நிகழ்ந்துள்ளன. அவர்கள் கிராமப்புறங்களிலிருந்து மருத்துவமனைக்குச் செல்லும் போது இறந்தனர். கடந்த டிசம்பர் 5 அன்று சிகிச்சைக்காக ஜுலாவில் இருந்து கூச்சிங்கிற்கு பேருந்தில் செல்லும்போது, ஒன்பது மாத குழந்தை தனது தாயின் மடியிலேயே இறந்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் மிகவும் வருத்தமளிப்பதாக அவர் கூறினார், ஏனெனில் இன்றைய காலத்திலும் கிராமப்புறங்களில் தரமான மருத்துவ வசதி இல்லாத மக்கள் உள்ளனர். இது நமது சுகாதார சேவைகளில், குறிப்பாக கிராமப்புறங்களில் சிறந்த மருத்துவ சேவை இல்லாதது மற்றும் புறக்கணிப்புக்களை தெளிவாகக் காட்டுகிறது
இந்தப் பிரச்சினையைச் சரியாகக் கையாளும் முயற்சியில், வறுமை ஒழிப்பு மற்றும் அடிப்படை வசதிகளைப் பெற தேவையான காரணிகளை கண்டறிய வேண்டியுள்ளது இருப்பினும், இந்த பிரச்சினை முற்றிலும் சுகாதார அமைச்சகத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது அல்ல என்று Yii கூறினார்.
சுகாதார அமைச்சரும், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அவரது துணை அதிகாரியும், கிராமப்புறங்களில் சுகாதார வசதிகளை மேம்படுத்த, பிரச்சினைகளைக் கண்டறிந்து தேவையான நிதி ஆதாரங்களை ஒதுக்குவது போன்ற முயற்சிகளை முன்னெடுப்பார்கள் என்று நம்புவதாக Yii தெரிவித்தார்.
நோயாளிகள் தாமதமின்றி முறையாக இடமாற்றம் செய்யப்படுவதை உறுதிசெய்யவும் சுகாதார வசதிகளுக்குத் தேவையான நிபுணர்கள் மற்றும் மனிதவளம் இருப்பதை உறுதிசெய்ய வேண்டிய தேவையும் உள்ளது என்று அவர் கூறினார்.