கோலா திரெங்கானு, டிசம்பர் 10 :
திரெங்கானுவில் பெய்த கனமழையால் கோலா திரெங்கானுவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது, இதன் காரணமாக சுமார் 50 குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
செண்டெரிங் (33 பேர் )மற்றும் அத்தாஸ் டோலில் (17 பேர்) பல இடங்களைச் சேர்ந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களைத் தங்க வைப்பதற்காக, அங்கு இரண்டு நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மைக் குழு செயலகம் தெரிவித்துள்ளது.
பெரும்பாலான மாவட்டங்களில் இன்னும் மழை பெய்து வருவதாகவும், மேலும் பலர் வெளியேற்றப்படுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் திணைக்களம் அதன் இணையதளத்தில் publicinfobanjir.water.gov.my பகிர்ந்துள்ள தரவுகளின் அடிப்படையில், சுங்கை நேரூஸ் மற்றும் சுங்கை சாலோக், உலு திரெங்கானுவில் உள்ள சுங்கை தெர்சாத்மற்றும் சுங்கை தெமெலோங் ஆகியவை அபாய அளவைத் தாண்டிவிட்டன.
இதற்கிடையில், கிளாந்தான் மற்றும் திரெங்கானுவில் உள்ள பல மாவட்டங்களுக்கு தொடர்ந்து கனமழையுடன் அபாய நிலை எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.











