தீயை அணைக்கும் பணியிலிருந்த தீயணைப்பு வீரர் காயம்

தெலுக் இந்தானில் உள்ள ஜாலான் ஊத்தாங்  மெலிந்தாங் பகுதியில்  ஏற்பட்ட தீயை அணைக்க முயன்ற தீயணைப்பு வீரர் ஒருவர் காயமடைந்தார்.  காயமடைந்த தீயணைப்பு வீரர் மருத்துவமனைக்கு கொண்டு  செல்லப்பட்டதாக பேராக் தீயணைப்பு மற்றும் மீட்பு   துறையினர் தெரிவித்தனர்.

 நேற்று (டிசம்பர் 9) மதியம் 2.40 மணியளவில் எங்களுக்கு  ஒரு  அழைப்பு வந்தது. அதைத் தொடர்ந்து  சம்பவ இடத்திற்கு சென்றபோது அங்கு  ஐந்து வளாகங்களில் தீப்பற்றி எரிவதைக் கண்டோம்.  தீயை அணைக்க பல மணி நேரம் ஆனது  என்றும்,அங்கு  இரண்டு வளாகங்கள் வீடுகளாகவும்   மீதமுள்ள மூன்று இடங்கள் முறையே மதுபானக் கடை, உணவகம் மற்றும் காலி இடமாகவும் இருந்தது  என்றும் அவர் கூறினார்.

காயமடைந்த தீயணைப்பு வீரர் பெரிய அளவில் காயமடையவில்லை என்றும்  மேலும் தீ விபத்துக்கான காரணத்தை  தற்போது விசாரித்து வருவதாகவும்   தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here