நிபோங் தெபால், டிசம்பர் 10:
நாட்டின் கல்வி தொடர்பான நடவடிக்கைகள் ஆக்கபூர்வமாகவும் திறமையாகவும் இருப்பதை உறுதிச் செய்வதற்கு, தேசிய கல்விப் பிரச்சனைகள் தொடர்பாக அனைத்துத் தரப்பினரின் கருத்துக்களையும் தாம் கேட்டறிந்து செய்ல்படுவதற்கு தயாராக இருப்பதாகக் கல்வி அமைச்சர், ஃபட்லினா சிடேக் தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சு மிகவும் முக்கியமான அமைச்சு என்பதால், அச்செயல்பாடு மிகவும் அவசியமானது என்றும் அவர் கருதுகின்றார்.
மேலும் தற்போதைய நிலவரங்கள் மற்றும் கல்வி அமைச்சின் நிலைப்பாடு தொடர்பில் , அவர் அடுத்த வாரம் சிறப்பு செய்தியாளர் சந்திப்பு ஒன்றையும் நடத்தவிருப்பதாகவும் ஃபட்லினா கூறினார்.