அமைச்சர்கள் குழு அமைக்க எவோன் வலியுறுத்தல்

சபாவைச் சேர்ந்த கேபினட் அமைச்சர் எவோன் பெனடிக், மாநில மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க சபாவைச் சேர்ந்த அனைத்து மத்திய அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்களால் ஒருமித்தக் குழுவை உருவாக்க வேண்டும் என்று முன்மொழிந்தார்.

தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சராக இருக்கும் எவோன், சபா மற்றும் சரவாக் விவகார அமைச்சர் அர்மிசான் அலியிடம் ஆலோசனையை செய்ததாக கூறினார்.  ஒற்றுமை அரசாங்கத்தின் கீழ் சபாவின் உரிமைகளை நிலைநிறுத்துவதற்கான சிறந்த அணுகுமுறையை நாங்கள் விவாதிப்போம், என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

பெனாம்பாங் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் எவோன், மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கு மட்டுமல்லாமல், கூட்டாட்சி அரசியலமைப்பு மற்றும்  சபாவின் உரிமைகளைப் பெறுவதற்கும் ஒத்துழைப்பு வேண்டும் என்றார்.  சபாவிலிருந்து ஏழு துணை அமைச்சர்களை நியமித்ததற்காக அன்வாருக்கு எவோன் நன்றி தெரிவித்தார்.

முந்தைய நிர்வாகங்களில் இவ்வளவு எண்ணிக்கையை நாங்கள் பெற்றதில்லை. எனவே , சபா மக்களுக்காக நாங்கள் கடினமாக உழைக்க வேண்டிய நேரம் இது  என்று அவர்  கூறினார்.  சபாவைச் சேர்ந்த ஏழு துணை அமைச்சர்களில், மூன்று பேர் பாரிசான் நேஷனல், இருவர் பக்காத்தான் ஹராப்பான்  ஒருவர் கபுங்கன் ரக்யாட் சபா மற்றும் வாரிசான்  கட்சியை    சேர்ந்த ஒருவரும்  உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here