சபா பெர்சாத்து இன்னும் செயற்பாட்டிலுள்ளது என்கிறார் முஹிடின்

கோலாலம்பூர், டிசம்பர் 11 :

சபா பெர்சாத்து தலைவர் டத்தோஸ்ரீ ஹாஜிஜி நூர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நேற்று முன்தினம் ராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தாலும், சபா பெர்சாத்து தொடர்ந்தும் செயல்பட்டு வருகிறது என்று பெர்சாத்து கட்சி தலைவர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் தெரிவித்தார்.

சபா பெர்சாத்து கட்சியின் துணைத் தலைவரும், பெலூரான் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ டாக்டர் ரொனால்ட் கியாண்டி சபா மாநில பெர்சாத்து தலைவராகவும், சபா மாநில பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் தகவல் தொடர்பாட்டு தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பெரிக்காத்தான் நேஷனலின் தலைவர், முஹிடின் தனது முகநூல் பக்கத்தில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்தார்.

“பெர்சாத்து மற்றும் பெரிக்காத்தான் உச்ச மன்றத்தினால் இது தொடர்பான மறுசீரமைப்பு முடிவு செய்யப்படும் வரை, சபா பெர்சாத்து மற்றும் சபா பெரிக்காத்தான் நேஷனல் ஆகியவற்றை மேற்பார்வையிடுவதற்கும் நிர்வகிப்பதும் கியாண்டியின் பொறுப்பு” என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here