திரெங்கானுவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 599 ஆக உயர்வு

திரெங்கானு, டிசம்பர் 11 :

இன்று ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 11) காலை 8 மணி நிலவரப்படி, திரெங்கானுவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 154 குடும்பங்களை உள்ளடக்கிய 599 பேராக அதிகரித்துள்ளது என்று மாநில பேரிடர் மேலாண்மைக் குழு செயலகம், இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நேற்றிரவு 85 குடும்பங்களைச் சேர்ந்த 308 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதால் இந்த எண்ணிக்கை உயர்வடைந்தது என்றும், குறித்த குடியிருப்பாளர்களை தங்க வைக்க கெமாமன் மாவட்டத்தில் மூன்று நிவாரண மையங்கள் நேற்றிரவு திறக்கப்பட்டது என்றும் அது தெரிவித்துள்ளது.

அப்பகுதியில் தொடர்ந்தும் மழை பெய்வதால், தமது குழு தொடர்ந்தும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும், அப்பகுதி மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here