மூத்த மாணவர் தாக்கியதால் வயிற்றுவலி, ரத்தம் கலந்த சிறுநீரால் அவதியுற்ற மாணவர்

பெந்தோங் மாவட்டத்தில் உள்ள உறைவிடப் பள்ளியில் மூத்த மாணவரால் தாக்கப்பட்ட மாணவர் ஒருவர் காயமடைந்தார். பெந்தோங் மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் ஜைஹாம் முகமது கஹர் கூறுகையில், பாதிக்கப்பட்ட 16 வயது இளைஞன் தனது தந்தையிடம் வயிற்று வலி மற்றும் இரத்தம் தோய்ந்த சிறுநீரைப் பற்றி புகார் செய்தான்.

உடனடியாக, பாதிக்கப்பட்டவரின் தந்தை அவரை சிகிச்சைக்காக பெந்தோங் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். மருத்துவமனையின் பரிசோதனை முடிவுகள் பாதிக்கப்பட்டவர் தாக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. மேலும் கேட்டதற்குப் பிறகு பாதிக்கப்பட்டவர், விடுதியில் தூங்கிக் கொண்டிருந்தபோது 17 வயது மாணவர் ஒருவரால் தாக்கப்பட்டதாகக் கூறினார்.

அவரது தந்தை இளைஞனை மேலதிக நடவடிக்கைக்காக பெந்தோங் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்வதற்கு முன்பு பாதிக்கப்பட்டவர் தான் பலமாக தாக்கப்பட்டதாக கூறியிருக்கிறார் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

சம்மந்தப்பட்ட பள்ளியுடன் போலீசார் தொடர்பு கொண்டுள்ளதாக சைஹாம் கூறினார். குற்றவியல் சட்டத்தின் 323வது பிரிவின்படி மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here