மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா அவர்கள் ஆறு நாட்கள் சிறப்புப் பயணமாக, இன்று செவ்வாய்க்கிழமை (டிச. 13) காத்தாரின் தோஹாவுக்குச் சென்றுள்ளார்.
2022 ஃபிஃபா உலகக் கிண்ண காற்பந்து போட்டியுடன் இணைந்து, காத்தார் அமிர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானியின் தனிப்பட்ட அழைப்பின் பேரில், இந்த சிறப்பு விஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது அரசு குடும்ப பொறுப்பாளர் டத்தோஸ்ரீ அஹ்மட் ஃபாடில் ஷம்சுடின் தெரிவித்தார்.
மாட்சிமை தங்கிய பேரரசர் காத்தாரில் இருக்கும்போது, உலககிண்ண காற்பந்து போட்டியின் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளைப் பார்வையிடுவார் என்றும், அமிர் ஷேக் தமீமை மரியாதை நிமிர்த்தம் சந்திப்பார் எனவும் அவர் இன்று முகநூலில் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.