Sotong Ride விபத்து: ஒரு குழந்தை உட்பட மூவர் காயம்

புஞ்சாக் ஆலம்  பகுதியில் உள்ள Eco Grandeur,  வேடிக்கை கண்காட்சி ராட்டினத்தில் இருந்து தவறி  கீழே விழுந்ததில்  இரண்டு பெண்கள் மற்றும் ஒரு குழந்தை காயமடைந்தனர்.

Sotong Ride இயக்கத்தில் இருந்தபோது அவர்கள் மூவரும் கீழே விழுந்து  காயமடைந்ததைத் தொடர்ந்து  மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக   கோல சிலாங்கூர் மாவட்ட காவல்துறைத் தலைவர் ரம்லி காசா   கூறினார்.

Sotong Ride   கட்டுப்பாட்டை இழந்தது போன்ற பல  வைரல் வீடியோ கிளிப்புகள் மற்றும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.  இதனைத்  தொடர்ந்து வேடிக்கை கண்காட்சி  உரிமம் இல்லாமல்  செயல்படுவதாக நம்பப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here