லாபுவானில் 12,000க்கும் மேற்பட்ட வர்த்தக உரிமங்கள் இன்னும் புதுப்பிக்கப்படவில்லை

லாபுவான் தீவில் உள்ள 12,000க்கும் மேற்பட்ட வர்த்தக உரிமங்களில் குறைந்தபட்சம் 53 விழுக்காடு இதுவரை புதுப்பிக்கப்படவில்லை என்றும், இவை அனைத்தும் இந்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்னதாக புதுப்பிக்கப்பட வேண்டும் என்றும் லாபுவான் கார்ப்பரேஷன் தலைமை நிர்வாக அதிகாரி, ரிதுவான் இஸ்மாயில் தெரிவித்தார்.

வர்த்தக நிறுவனத்தின் உரிமம் புதுப்பிக்கும் காலத்தை, அதன் காலாவதியாகும் போது (டிசம்பர் 31 அன்று) முந்தைய ஆண்டுகளைப் போல நீட்டிக்காது என்றும் காலக்கெடுவிற்கு முன்னர் உரிமத்தை புதுப்பிக்காத தவறினால் RM100 அபராதம் விதிக்கப்படும் என்றார் அவர்.

புதிய விண்ணப்பங்கள் மற்றும் புதுப்பித்தல்களுக்கான வர்த்தக உரிமத்தைப் பெறுவதற்கான செயல்முறையை நிறுவனம் தொடர்ந்து மேம்படுத்தும் என்றும் “புதுப்பித்தல் செயல்முறை (அனைத்து ஆவணங்களும் பூர்த்தி செய்யப்பட்டால்) விண்ணப்பங்களின் அளவைப் பொறுத்து ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்திற்குள் செய்யப்படலாம்,” என்றும் அவர் கூறினார்.

வணிக உரிமையாளர்களுக்கு குறிப்பாக உணவு மற்றும் பானங்கள் (F&B) நிறுவனங்கள் வைத்திருப்பவர்கள் தங்களது வளாகங்கள் சுத்தமாகவும் நேர்த்தியாகவும் இருப்பதை உறுதிசெய்யுமாறு ரிதுவான் நினைவூட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here