2022 பிரபல சினிமா பட்டியலில் இடம் பிடித்த தென்னிந்திய படங்கள்

தென்னிந்திய சினிமா “பாக்ஸ் ஆபிஸ்”  என்பது   வசூல்  மற்றும் வெளிநாட்டு விருதுகளை  அடிப்படையாகக் கொண்டது. தென்னிந்திய சினிமாக்கள் தற்போது இந்திய பொழுதுபோக்கு சந்தையை ஆளுகின்றன. சமீபத்தில், IMDB 2022 ஆம் ஆண்டின் முதல் 10      இடங்களைப் பிடித்த திரைப்படங்களின் பட்டியலை வெளியிட்டது, இதில் ஒரே ஒரு பாலிவுட் படம் மட்டுமே இடம்பெற்று உள்ளது.

எஸ்.எஸ்.ராஜமவுலியின் சூப்பர்ஹிட் பிளாக்பஸ்டர் படமான ‘RRR’ முதலிடத்தைப் பிடித்து உள்ளது.

பட்டியலில் இடம்பெற்றுள்ள படங்கள் வருமாறு:-

1.ஆர்.ஆர்.ஆர்

2. தி காஷ்மீர் பைல்ஸ்

3.கே.ஜி.எப்-2

4.விக்ரம்

5.காந்தாரா

6.ராக்கெட்ரி: நம்பி விளைவு

7.மேஜர்

8.சீதா ராமம்

9.பொன்னியின் செல்வன்: பாகம் ஒன்று

10. 777 சார்லி

‘RRR’படம் மார்ச் மாத தொடக்கத்தில்  தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி  ஆகிய   ஐந்து மொழிகளில் வெளியானது. ‘RRR’ கோல்டன் குளோப் விருதுகளுக்கான பரிந்துரைகளையும் பெற்று உள்ளது.

விவேக் அக்னிஹோத்ரி இயக்கிய  ‘தி காஷ்மீர் பைல்ஸ்’   படத்தில் அனுபம் கேர், மிதுன் சக்ரவர்த்தி மற்றும் தர்ஷன் குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளால் அவர்களது சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து காஷ்மீரி இந்துக்கள் காஷ்மீரில் இருந்து வெளியேறுவதாக  இப்படம் அமைந்திருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here