சக்தி வாய்ந்த நில நடுக்கத்தால் பாதித்த தைவான் : மக்கள் வீதிகளில் தஞ்சம்

புவித்தட்டுகள் அடிக்கடி நகர்கிற இடத்தில் தைவான் தீவு அமைந்துள்ளதால், அங்கு பலமுறை  நில நடுக்கம் ஏற்பட்டு வருகிறது.

நேற்று ஏற்பட்ட  நில நடுக்கமானது  12 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்தது. பொதுவாக 6 புள்ளிகளுக்கு மேற்பட்ட நில நடுக்கங்கள் ஆபத்தானவை என்றபோதிலும்,  அது எங்கு தாக்குகிறது, எந்தளவு ஆழத்தில் மையம் கொள்கிறது என்பதைப்  பொறுத்துப்      பாதிப்புகளை உண்டாக்கும்.

இந்த  நில நடுக்கத்தால் தைவான் தலைநகர் தைபே பாதிக்கப்பட்டது. கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதியில் வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட கட்டிடங்களை விட்டு வெளியேறி வீதிகளில், திறந்தவெளி மைதானங்களில் தஞ்சம் அடைந்தனர்.

இந்த நில நடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பாக எந்தவொரு தகவலும் உடனடியாக வெளியாகவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here