நிலச்சரிவில் தாய் – மகள் என நம்பப்படும் இருவரின் சடலம் மீட்பு

உலு சிலாங்கூர்: பத்தாங் காலியில் ஏற்பட்ட நிலச்சரிவில் இருந்து தாய் மற்றும் அவரது மகள் என நம்பப்படும் மேலும் இரண்டு உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ரிவர்சைடு முகாமில் இருவரும் ஒருவரையொருவர் கட்டித்தழுவியபடி காணப்பட்டனர்.

இருவரும் மாலை 4.40 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டனர். ஒருவரையொருவர் கட்டிப்பிடித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் தாய் மற்றும் மகள் என்று நாங்கள் நம்புகிறோம் என்று செய்தித் தொடர்பாளர் கூறினார்.

இருவரது உடல்களும் மீட்கப்பட்டதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 15 பேரை தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here