பத்தாங் காலியில் 450,000 கன மீட்டர் மண் சரிவு

உலு சிலாங்கூர்: பத்தாங் காலியில் உள்ள ஆர்கானிக் பண்ணையில் 450,000 கன மீட்டர் மண் சரிவு ஏற்பட்டதாக அறியப்படுகிறது.

இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சர் நிக் நஸ்மி நிக் அஹ்மட், கனிமங்கள் மற்றும் புவி அறிவியல் துறை, ஆபத்து மண்டலங்களை கண்டறிய நிபுணர்களை அனுப்பியுள்ளதாக தெரிவித்தார்.

நிலைமையைக் கண்காணித்து, மேலும் மண் சரிவு ஏற்பட வாய்ப்பு இருந்தால் மீட்பு பணியாளர்களை எச்சரிப்பார்கள்.

சோதனைகளில்  500 மீ x 200 மீ பரப்பளவில் எட்டு மீட்டர் ஆழத்தில் சரிவு ஏற்பட்டது தெரியவந்துள்ளது என்று அவர் சம்பவ இடத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here