இன்று உலகக்கோப்பை கால்பந்து இறுதி யுத்தம்: கோப்பையை வெல்லப்போவது யார்

22 ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அரபு நாடான கத்தாரில் கடந்த மாதம் 20-ந்தேதி கோலாகலமாக தொடங்கியது. லீக், நாக்-அவுட் முடிவில் நடப்பு சாம்பியன் பிரான்சும், முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினாவும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.

இந்த நிலையில் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் பேராவலுடன் உற்றுநோக்கும் உலகக் கோப்பை கால்பந்து இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ்- அர்ஜென்டினா அணிகள் இன்றிரவு 8.30 மணிக்கு மோதுகின்றன.

மெஸ்சியின் கடைசி உலகக் கோப்பை போட்டி இது என்பதால் தனது நீண்ட கால ஏக்கத்தை தணிக்கும் வகையில் கோப்பையை கையில் ஏந்தி அர்ஜென்டினா ரசிகர்களுக்கு ஆனந்தத்தை அள்ளிக் கொடுப்பாரா அல்லது பிரான்ஸ் அணியினர் தட்டிச் செல்வார்களா என்பதே எல்லா தரப்பினரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இதில் வாகை சூடும் அணிக்கு ரூ.342 கோடி பரிசுத்தொகை காத்திருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here