எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, தானா மேரா கம்போங் சாவாஸில் மீண்டும் வெள்ளத்தில் மூழ்கியது

தானா மேரா: கடந்த 2014 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் மறக்க முடியாத அனுபவத்தை கம்போங் சாவாஸில் வசிப்பவர்களில் 50க்கும் மேற்பட்டோர் மீண்டும் சந்தித்துள்ளனர்.

48 வயதான நோரிடா முகமட் நூர், இரவு பெய்த கனமழையைத் தொடர்ந்து இன்று காலை 8 மணியளவில் தனது வீட்டில் வெள்ளம்  சூழத் தொடங்கியது.

நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருவதைக் கண்டு நான் உடனடியாக என் மகனை அழைத்தேன். அவனுடைய காரை விரைவாக உயரமான இடத்திற்கு நகர்த்தினேன், ஏனென்றால் அந்த நேரத்தில் அது ஏற்கனவே முழங்கால் அளவுக்கு மூழ்கி இருந்தது என்று அவர் பெர்னாமாவிடம் கூறினார்.

மற்றொரு குடியிருப்பாளரான சுக்ரி இஸ்மாயில் 55, தனது புரோட்டான் வீரா காரை உயரமான இடத்திற்கு நகர்த்த மிகவும் தாமதமானது என்றார். ஏனெனில் அதிகாலையில் வெள்ள நீர் மிக விரைவாக உயர்ந்தது.

எங்கள் கிராமம் கடந்த 2014 ஆம் ஆண்டு மஞ்சள் வெள்ளத்தின் போது (சேற்று நீர் அலை) வெள்ளத்தில் மூழ்கியது. திடீரென்று தண்ணீர் உயர்ந்ததால் நான் திகைத்துப் போனேன், காரை நகர்த்த எனக்கு நேரமில்லாமல் போனது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here