கடந்த 11 ஆண்டுகளாக தேசிய பூப்பந்து அணியில் ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவில் இடம்பிடித்த மகளிர் ஒற்றையர் ஷட்லர் எஸ்.கிஷோனா மலேசியாவின் பூப்பந்து சங்கத்திலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளார்.
இதனை மலேசிய பூப்பந்து சங்கத்தின் தேசிய ஒற்றையர் பயிற்சி இயக்குனர் வோங் சூங் ஹான் உறுதிப்படுத்தினார்.
24 வயதான கிஷோனா தனது முழங்கால் காயங்களால் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளார், எனவே பூப்பந்து அணியிலிருந்து விலகி, முழங்கால் பிரச்சினைகளில் இருந்து மீண்டு வருவதில் அவர் முழுமையாக கவனம் செலுத்த உள்ளார் என்றும் அத்தோடு அவர் தொடர்ந்து தொழில்முறை வீரராக விளையாடுவர் என்றும் அவர் மேலும் கூறினார்.
கிஷோனா கடந்த 2019 SEA விளையாட்டுப் போட்டியில், மகளிர் ஒற்றையருக்கான பிரிவில் தங்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.