ஒற்றுமை அரசாங்கம் தேர்தல் அறிக்கைகளை இணைக்க வேண்டும்: ரஃபிஸி

ஒற்றுமை அரசாங்கத்தின்  பல்வேறு கூட்டணிகள் மற்றும் கட்சிகள் அளித்த உறுதிமொழிகளில் சிலவற்றை புத்ராஜெயா தேர்ந்தெடுத்து இணைக்கும் என்று பொருளாதார விவகார அமைச்சர்    ரஃபிஸி ரம்லி கூறுகிறார்.  அத்தகைய நோக்கத்திற்காக ஒரு குழுவை அமைக்க தலைமைச் செயலாளர் Zuki Ali   யை அமைச்சரவை பணித்துள்ளதாக ரஃபிஸி கூறினார்.

நாங்கள் வெவ்வேறு பின்னணிகள், வெவ்வேறு கொள்கைகள் கொண்ட கட்சிகளின் கூட்டணி.  மேலும் ஒவ்வொரு கட்சியும்   GE15 இல் தங்களின்  சொந்த அறிக்கையைக் கொண்டுள்ளன.  ஆனால் இப்போது  அரசாங்கத்தில் நாங்கள்  அனைவரும்   ஒன்றாக இருப்பதால், அனைத்து அறிக்கையையும் விரைவாக இணைக்க  ஒரு நேரக் கட்டுப்பாடு தேவையாக   உள்ளது.

அது ஒவ்வொரு கூட்டணியின் அறிக்கைகளிலிருந்தும் குறிப்பிட்ட திட்டங்களையும்  தேர்வு செய்யவும், பின்னர் ஒருங்கிணைக்கவும் அமைச்சரவை மட்டத்தில்  ஒரு குழு தேவை   என்று  மக்களவை அமர்வு முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்.    கடந்த வெள்ளிக்கிழமை ஒற்றுமை  அரசாங்கத்தின் தலைவர்களால் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் (MoU) ஷரத்து 2 இன் கீழ் அமைக்கப்பட்டுள்ள 18 அர்ப்பணிப்புகளின் மூலம் திட்டங்களைத் தேர்ந்தெடுப்பதற்கான பேச்சுவார்த்தைகள் வழிநடத்தப்படும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இன வேறுபாடின்றி வறுமையை ஒழித்தல், பின்னணி எதுவாக இருந்தாலும் ஏழைகளுக்கு நியாயமான பொருளாதார வாய்ப்புகளை வழங்குதல், அத்துடன் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம், பேச்சுரிமை மற்றும் அரசாங்கத்தின் மூன்று பிரிவுகளுக்கு இடையே அதிகாரப் பிரிவினையை மேம்படுத்துதல் ஆகியவை இதில் அடங்கும்.

புதிய அரசாங்கம் அனைத்து   நாடாளுமன்ற  உறுப்பினர்களுக்கும்   சமமான நிதியை வழங்குமா என்று கேட்கப்பட்டதற்கு, இது நிதி அமைச்சகத்திடம் கேட்க வேண்டிய  கேள்வி என்று ரஃபிஸி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here