குனுங் புலை மலையேறும் போது காணாமல் போன ஆடவர், பாதுகாப்பாக மீட்கப்பட்டார்

ஜோகூரின் குனுங் புலை மலையேறும் போது காணாமல் போன ஒருவர் நேற்று நள்ளிரவு பத்திரமாக மீட்கப்பட்டார்.

56 வயதான லீ சின் சாய் என்பவர், காணாமல் போனதாக நம்பப்படும் கடைசி இடத்திலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில், சோர்வடைந்த நிலையில் காணப்பட்டதாக தேடல் நடவடிக்கை கமாண்டர் முகமட் கைரி ஜைனுடின் கூறினார்.

நேற்றிரவு 12.30 மணியளவில் அவர் கண்டுபிடிக்கப்பட முன்பு, பாதிக்கப்பட்டவர் மீட்புக் குழுவின் அழைப்பிற்கு பதிலளித்தார், அவர் இருந்த இடம் ஒரு புதர் என்றும் அதன் பின்னர் பாதிக்கப்பட்டவரின் குரலைக் கேட்டதும், மீட்புக் குழு பாதிக்கப்பட்டவரை நோக்கி ஒரு பாதையை உருவாக்கி, அவரைக் காப்பாற்றியது என்றார்.

“பாதிக்கப்பட்டவர் மிகவும் சோர்வாக இருந்தார், ஆனால் சிறிதளவு உணவு கொடுக்கப்பட்ட பிறகு, அவரால் சொந்தமாகவே நடக்க முடிந்தது” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு ஊடக அறிக்கையில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here