பொதுச் சேவை ஊழியர்களுக்கான RM100 சிறப்பு நிதி உதவி தொடரும்

பொது சேவைத்துறை ஊழியர்களுக்கு KGT எனப்படும் ஆண்டு ஊதிய உயர்வில் RM100 சிறப்பு நிதி உதவியாக வழங்குவதற்கு முந்தைய அரசாங்கம் ஏற்கனவே அறிவித்திருந்த திட்டத்தை தொடர்வதற்கு, ஒருமைப்பாட்டு அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

மக்களுக்குச் சிறந்த சேவையை வழங்குவதில் முறையாகச் செயல்படும் பொதுச் சேவைத்துறை ஊழியர்களின் அர்ப்பணிப்புக்குச் ஒருமைப்பாட்டு அரசாங்கம் நன்றி தெரிவிப்பதன் அடையாளமாக இது விளங்கும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

கிரேட் 11-இல் இருந்து 56 வரையிலான பொதுச் சேவை ஊழியர்களுக்கு சிறப்பு நிதியாக RM100 வழங்கப்படும். அதோடு கிரேட் 56 கீழுள்ள 13 லட்சம் பொதுச் சேவைத்துறை ஊழியர்களுக்கு RM700 மற்றும் பணி ஓய்வு பெற்ற 10 லட்சம் அரசாங்க ஊழியர்களுக்கு RM350 வழங்க அரசாங்கம் இணக்கம் தெரிவித்தது.

முன்னதாக, முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பின் தலைமைத்துவதில்பொதுச் சேவைத்துறை ஊழியர்களுக்காக சில கூடுதல் சலுகைகள் அறிவிக்கப்பட்டன.

அதில், 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி KGTயின் கீழ் கூடுதல் நிதியாக RM100 ஜனவரியில் PKK எனப்படும் சிறப்பு நிதி உதவியின் கீழ் RM700 வழங்கப்படுவது என்பன உள்ளடங்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here