ஜாலான் மஸ்ஜிட் நெகிரியில், நோயாளியை ஏற்றிவந்த ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பில் மோதி, பின்னர் சாலையோரத்திலிருந்த மரத்தின் மீது மோதியதில், நோயாளி உட்பட நான்கு பேர் காயமடைந்தனர்.
சுங்கை ஆராவிலிருந்து ஒரு நோயாளியையும் அவரது மகளையும் அழைத்துக் கொண்டு பினாங்கு மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருந்தபோது, மாலை 4.40 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக தீமூர் லாவூட் காவல்துறை துணைத் தலைவர், வி.சரவணன் கூறினார்.
“ஆம்புலன்ஸின் இருக்கைகளில் சிக்கிக்கொண்ட 22 வயதான ஆம்புலன்ஸ் ஓட்டுநர், 54 வயதான நோயாளி மற்றும் அவரது 24 வயது மகள் ஆகியோர் தீயணைப்பு வீரர்களால் மீட்கப்பட்டனர் ” என்று அவர் இன்று தொடர்பு கொண்டபோது கூறினார்.
ஆம்புலன்ஸ் ஓட்டுநரது கைகளிலும் தலையிலும் காயங்கள் ஏற்பட்டதாகவும், துணை வைத்திய அதிகாரியின் முகம் மற்றும் கைகளில் சிறு காயங்கள் ஏற்பட்டதாகவும் அதே நேரத்தில் நோயாளிக்கு அவரது தலையிலும், மகளுக்கு தலை மற்றும் முகத்திலும் காயங்கள் ஏற்பட்டன,” என்று அவர் மேலும் கூறினார்.