சமந்தா சினிமாவிலிருந்து ஓய்வு பெறுகிறாரா ?

சமந்தா நடிப்பில் ஹரி – ஹரீஷ் இயக்கத்தில் வெளியான  திரைப்படம் யசோதா. 5 மொழிகளில் தயாரான இந்தப்படத்தில் நடிகை சமந்தாவுடன் வரலட்சுமி சரத்குமார், சம்பத் ராஜ், மதுரிமா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.  பான் இந்திய படமாக ரிலீஸான இந்தப்படம் ரூ. 50-60 கோடி வசூலானதாக தகவல் வெளியானது. மேலும் 2023இல் இவரது சாகுந்தலம், குஷி படங்கள் வெளிவர உள்ளது. தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் குஷி படத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் மயோசிடிஸ் எனும் அரிய வகை தசை அழற்சி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமந்தா தெரிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். சமந்தாவுக்கு உயர் சிகிச்சை தேவைப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்ததன்பேரில், சமந்தா தென்கொரியா செல்ல திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹிந்தியில் பேமலி மேன் 2 வெற்றிக்குப் பிறகு சமந்தாவுக்கு நிறைய வாய்ப்புகள் வருகிறது. ஆனால் உடல்நலனில் அக்கறை காட்ட நீண்டநாள் ஓய்வு தேவைப்படுவதால் படக்குழுவினரை காத்திருக்கும்படி கூறியுள்ளாராம். ரசிகர்களின் எதிர்பார்ப்பெல்லாம் சமந்தா விரைவில் குணமாக வேண்டும் என்பதாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here