24 மணி நேரத்தில் 6 மாநிலங்களில் வெள்ளம் ஏற்படும் அபாயம்

கனமழை அல்லது குறிப்பிடத்தக்க இடியுடன் கூடிய மழை பெய்தால் ஜோகூர், பகாங், பேராக், சிலாங்கூர், தெரெங்கானு மற்றும் சபா ஆகிய இடங்களில் 24 மணி நேரத்திற்குள் திடீர் வெள்ளம் ஏற்படும் என்று நீர்ப்பாசனத் துறையின் தேசிய வெள்ள முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை மையம் (PRABN) தெரிவித்துள்ளது.

இதில்,  ஜோகூரில் உள்ள கோத்தா  திங்கியைச் சுற்றியுள்ள செடிலி கிச்சில் மற்றும் உலு சுங்கை செடிலி பெசார், மூவார் (சித்தி , பந்தார் மகாராணி மற்றும் ஜாலான் பக்ரி) மற்றும் மெர்சிங் (பாடாங் எண்டாவ் நகரம்) ஆகிய பகுதிகள் அடங்கும்.  பகாங்கில், பந்தார் குவாந்தனைச் சுற்றியுள்ள குவாந்தான், உலு குவாந்தன், கோல குவாந்தன், புலாவ் மானிஸ் மற்றும் சுங்கை கரங், மாரான் (டவுன்) மற்றும் பெக்கான்  ஆகிய மூன்று மாவட்டங்கள்  உள்ளன.

இதற்கிடையில், பேராக்கில், பாகன் டத்தூக் (பெக்கான் சிம்பாங் அம்பாட்) மற்றும் ஹிலிர் பேராக் (துரியன் செபதாங்) ஆகிய இரு மாவட்டங்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  தெரெங்கானுவைப் பொறுத்தவரை, மாராங் (புக்கிட் பாயுங்) மற்றும் கோல தெரெங்கானு  ஆகியவை பாதிக்கப்படும் என்று கணிக்கப்பட்டுள்ள பகுதிகள் ஆகும்.  மேலும் சபா, துவாரன்  ஆகிய  பகுதிகளும்   அடங்கும்.  அனைத்து மக்களும், குறிப்பாக ஆபத்து பகுதிகளில் இருப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க  அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதிகாரிகள் அல்லது வெள்ளப் பேரிடர் மேலாண்மைக் குழு  அறிவுறுத்தல்களுக்கும் கூடுதல் தகவல்களைப் பெறவும் https://publicinfobanjir.water.gov.my அல்லது  முகநூல் @PublicInfoBanjir மற்றும் டுவிட்டர்  @JPS_InfoBanjir என்ற இணையதளத்தைப் பார்வையிட பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here