அன்வாரின் மூத்த அரசியல் செயலாளராக ஷம்சுல் பதவியேற்றார்

ஹாங் துவா ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் ஷம்சுல் இஸ்கந்தர் அகின், பிரதமர் அன்வார் இப்ராஹிமின் மூத்த அரசியல் செயலாளராக  சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.

சமீபத்திய பொதுத் தேர்தலில் பாகன் டத்தோ நாடாளுமன்றத் தொகுதிக்கான போட்டியில் அம்னோ தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடியிடம் தோல்வியடைந்த ஷம்சுல், அன்வார் மற்றும் அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் ஜூகி அலி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

முன்னாள் அலோர் செத்தார் நாடாளுமன்ற உறுப்பினர் சான் மிங் காய் மற்றும் அஹ்மத் ஃபர்ஹான் ஃபௌசி ஆகியோரும் அன்வாரின் அரசியல் செயலாளர்களாக நியமிக்கப்பட்டனர். தங்களுக்கு ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளை அவர்கள் சிறப்பாகச் செய்யட்டும்  என்று பிரதமர் தனது முகநூல் பதிவில் கூறியுள்ளார்.

2013 இல் புக்கிட் கட்டில் நாடாளுமன்றத் தொகுதிக்கு அப்போதைய மலாக்கா முதல்வர் அலி ருஸ்தானமை தோற்கடித்த ஷம்சுல் கடந்த காலங்களில் “giant-killer”” என்று அழைக்கப்பட்டார்.

2018 இல் ஹாங் துவா ஜெயா தொகுதிக்கான போட்டியில் பிகேஆர் நபர் மீண்டும் அலியை தோற்கடித்தார். GE15 இல், அவர் இப்போது துணைப் பிரதமரான ஜாஹிட்டிம் 348 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

சான் 2008 முதல் 2013 வரை சிம்பாங் பூலாய் சட்டமன்ற உறுப்பினராகவும், 2013 முதல் 2018 வரை இந்திரா கயங்கன் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.

அவர் 2018 இல் அலோர் செத்தார் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் GE15 இல் தனது இடத்தைப் பாதுகாக்க அவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here