இரண்டு ஆண்டுகளில் 19 முறை கைது செய்யப்பட்ட நபர்

கடந்த இரண்டு ஆண்டுகளில் 19ஆவது முறையாக திருடன் ஒருவனை போலீசார் கைது செய்தனர். Melaka Tengah OCPD Asst Comm Christopher Patit, 42 வயதான நபர் கிறிஸ்துமஸ் ஈவ் அன்று  ஆயர் கெரோவில் உள்ள ஒரு வீட்டில் நடந்த கொள்ளை சம்பவத்தின் போது கைது செய்யப்பட்டதாக கூறினார்.

இந்த கொள்ளை சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர் தனது  கோல்ஃப் உபகரணங்கள் உட்பட RM50,000 இழந்துள்ளார் என்று  கூறினார். ACP  Christopher Patit  கூறுகையில்,  சந்தேக நபர்   மீது இதற்கு முன்னர் 2020 ஆம் ஆண்டு முதல் இந்த வருடம் வரை 18 தடவைகள்   குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்ற வழக்குகள் நடந்து வருகின்றன.

சந்தேகநபர் திங்கள்கிழமை (டிசம்பர் 26) வரை தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார் என ACP  Christopher Patit தெரிவித்தார். குற்றவியல் சட்டத்தின் 457ஆஆவது பிரிவின் கீழ் சந்தேகநபருக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். சிறைத்தண்டனை 14 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படலாம் மற்றும் மீண்டும் மீண்டும் குற்றம் செய்பவர்களுக்கு அபராதம் அல்லது பிரம்படி வழங்கப்படும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here