மீனவர்கள் நலன்களை அனுபவிக்க வேண்டுமாயின், அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களில் பதிவு செய்து கொள்ள வேண்டும்- மீன்வள மேம்பாட்டு வாரியம்

பேரிடர் ஏற்பட்டால் அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்கான செயல்முறையை எளிதாக்க, நாட்டிலுள்ள மீனவர்கள் அனைவரும் மலேசிய மீன்வள மேம்பாட்டு வாரியத்தால் (LKIM) அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களில் பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மலேசிய மீன்வள மேம்பாட்டு வாரிய இயக்குநர் ஜெனரல் யூசூஃப் ஓத்மான் கூறுகையில், மலேசிய மீன்வள மேம்பாட்டு வாரியத்தால் அத்தகைய சங்கங்களில் உறுப்பினர்களாக இருக்கும் மீனவர்களுக்கு மட்டுமே உதவ முடியும் என்றும், உறுப்பினர்களாக இருப்பதன் மூலம் அவர்கள் பல நன்மைகளை அனுபவிக்க முடியும் என்றும் கூறினார்.

“மீனவர்கள் மீனவர்கள் சங்கத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும், ஏனென்றால் அவர்களை தொழில் ரீதியாக பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்ய நாங்கள் தரவுகளைப் பெற விரும்புகிறோம். எங்கள் தரவுகளின் அடிப்படையில், நாட்டில் இன்னும் 20,000 முதல் 30,000 மீனவர்கள் (மீனவர்கள் சங்கத்தில்) பதிவு செய்து கொள்ளப்படவில்லை.

அங்கிகரிக்கப்பட்ட சங்கங்களில் பதியாது இருக்கும் மீனவர்கள், அரசிடமிருந்து கிடைக்கும் வாழ்வாதார உதவி, டீசல் மானியம், வட்டியில்லா கடன், வெள்ள நிவாரணம் போன்ற சலுகைகளை இழக்க நேரிடும் என்றார்.

இன்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தும்பாட் மாவட்ட மீனவர்களுக்கு நன்கொடைகளை வழங்கிய பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது இவ்வாறு கூறினார்.

இதற்கிடையில், பகாங், திரெங்கானு மற்றும் கிளாந்தான் ஆகிய பகுதிகளில் மொத்தம் 1,250 மீனவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்தாலும், வெள்ளம் மூன்று மாநிலங்களில் உள்ள மீன் வளத்தை பாதிக்கவில்லை என்றும் யூசோஃப் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here