ஜூரைடா உட்பட 13 பேர் PBM கட்சியிலிருந்து நீக்கப்படலாம்

பார்ட்டி பங்சா மலேசியாவிலிருந்து (PBM) இடைநீக்கம் செய்யப்பட்ட ஜூரைடா உட்பட 13 உறுப்பினர்களும் கட்சியிலிருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளது.

இந்த மாதம் 17 ஆம் தேதி அன்று குறித்த 13 பேருக்கும் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட கடிதம் வழங்கப்பட்டதுடன் அதற்கு பதிலளிக்குமாறு வழங்கப்பட்டிருந்த காலக்கெடு நேற்றோடு முடிவடைந்துள்ளது.

இந்த நிலையில் ஒரு வார கால காலக்கெடு வழங்கியும் முன்னாள் பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் மூலப் பொருட்கள் அமைச்சர் டத்தோ ஜூரைடா கமாருடின் உட்பட ஏனைய 12 பேரும் இதுவரை அந்தக் கடித்தத்திற்கு பதிலளிக்க வில்லை. எனவே அவர்கள் அனைவரும் கட்சியின் கட்டொழுங்கு நடவடிக்கையை எதிர்கொள்வார்கள் என்றும் கடசியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்றும் PBM கட்சியின் தலைவர் டத்தோ லாரி செங் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here