அலோர் காஜா: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு தேசத்தை வழிநடத்துவதில் தனது திறமையை நிரூபிக்க இடமும் வாய்ப்பும் வழங்கப்பட வேண்டும் என்று மலாக்கா பக்காத்தான் ஹராப்பான் தலைவர் அட்லி ஜோஹாரி கூறியுள்ளார்.
10ஆவது பிரதமரின் திறன் மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் அடுத்த ஆண்டு உலக பொருளாதார நிச்சயமற்ற நிலை ஏற்பட்டாலும் அன்வாரால் நாட்டை வழிநடத்த முடியும் என தாம் நம்புவதாக துணை பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்.
அவர் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வார் என்று நான் நம்புகிறேன். மலேசியாவை சிறந்த நிலைக்கு கொண்டு செல்ல மலேசியர்கள் அவருக்கு இடம் மற்றும் வாய்ப்பு மற்றும் ஆதரவையும் ஊக்கத்தையும் கொடுக்க வேண்டும் என்று அவர் இன்று (டிசம்பர் 26) கம்பங் மச்சாப் பாருவில் செய்தியாளர்களிடம் கூறினார்.
முன்னதாக, சிலாங்கூர் பத்தாங்காலியில் சமீபத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு சோகத்தில் தங்கள் குடும்ப உறுப்பினர்களை இழந்த லாய் ஹுவா கியோங் 54 மற்றும் தை செங் ஃபூய் 63 ஆகியோருக்கு அட்லி நன்கொடைகளை வழங்கினார்.
நேற்று (டிசம்பர் 25), முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது, தற்போதைய பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொள்ளும் அன்வாரின் திறன் மற்றும் கோவிட்-19க்குப் பிந்தைய மீட்புக்கு உதவுவது குறித்து கவலை தெரிவித்தார்.