குடிபோதையில் போக்குவரத்திற்கு எதிராக கார் ஓட்டியதால் ஏற்பட்ட விபத்து – மூவர் காயம்

பெட்டாலிங் ஜெயா:

தாமான் மேகா மேம்பாலம் அருகே உள்ள டாமான்சாரா-பூச்சோங் விரைவுச்சாலையில் (LDP) இன்று இரண்டு வாகனங்கள் விபத்துக்குள்ளானதில், மூவர் காயமடைந்தனர்.

இந்த விபத்து, குடிபோதையில் போக்குவரத்திற்கு எதிராக வாகனம் ஓட்டிய ஒருவரின் செயலால் ஏற்பட்டதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் முகமட் ஃபக்ருடின் அப்துல் ஹமீட் கூறினார்.

இன்று காலை 6.09 மணிக்கு குறித்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.

“ஹோண்டா சிவிக் காரை ஓட்டிவந்த 27 வயது இளைஞன், குடிபோதையில் போக்குவரத்துக்கு எதிராக காரை ஓட்டிச் சென்றதால் விபத்து ஏற்பட்டதாகவும், அப்போது முன்னால் இருந்து வந்த புரோத்தோன் சாகாவை அந்தத் கார் மோதியதாகவும் ” முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த விபத்தில் ஹோண்டா சிவிக் காரில் பயணித்த இருவர் மற்றும் புரோத்தோன் சாகா காரை ஓட்டிச் சென்ற இருவர் காயமடைந்ததாக, இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் முகமட் ஃபக்ருடின் கூறினார்.

“காயமடைந்தவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மலாயா பல்கலைக்கழக மருத்துவ மையத்திற்கு (PPUM) கொண்டு செல்லப்பட்டனர்.

“சாலை போக்குவரத்து சட்டம் 1987 இன் பிரிவு 44 இன் படி விசாரணைக்கு உதவ, ஹோண்டா சிவிக் கார் ஓட்டுநர் இரண்டு நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்,” என்று அவர் மேலும் கூறினார்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்தவர்கள், துணை போக்குவரத்து புலனாய்வு அதிகாரி, சார்ஜென்ட் ஜூவிட்டா செலாமாட்டை 019-2841667 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விசாரணைக்கு உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here